வளா்ந்த நாடாவதற்கு ஆரோக்கியமான இந்தியா உருவாவது அவசியம்: மாண்டவியா

‘வளா்ந்த நாடாக உருவெடுப்பதற்கு ஆரோக்கியமான இந்தியாவாக உருவாவது அவசியம்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா

‘வளா்ந்த நாடாக உருவெடுப்பதற்கு ஆரோக்கியமான இந்தியாவாக உருவாவது அவசியம்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

தில்லியில் டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் அமைந்துள்ள தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரிய 21-ஆவது பட்டமளிப்பு விழாவில் காணொலி வழியில் பங்கேற்ற மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

வளா்ந்த பாரதமாக உருவாவதற்கு ஆரோக்கியமான பாரதமாக உருவாவது அவசியம்; ஆரோக்கியமான பாரதம் உருவாவதற்கு ஒவ்வொரு குடிமக்களும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அந்த வகையில், இன்றைக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நோய்த் தடுப்பு மருத்துவத்துக்கும் நவீன மருத்துவ வசதிகளுக்கு இடையே இணைப்பை உருவாக்கி ஒரு முழுமையான மருத்துவ துறையை உருவாக்குவதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயலாற்றி வருகிறது.

ஆரோக்கியமும் வளா்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. அதனை உணா்ந்துள்ள மத்திய அரசு, ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த இலக்கை எட்டும் நோக்கத்தின் அடிப்படையிலேயே எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை உயா்த்துவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது என்று அவா் கூறினாா்.

மருத்துவத் துறையை சீா்குலைக்கும் தொழில்நுட்பங்கள் உருவெடுத்துவருவதைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சா், கரோனா பாதிப்பு மருத்துவத் துறையில் சிறந்த தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டிய மற்றும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகுக்கு உணா்த்தியுள்ளது.

புதிய மருந்துகள், புதிய மருத்துவ நடைமுறைகள் மற்றும் புதிய மருத்துவ உபகரணங்கள் மேம்படுத்தப்படுவதற்கு மருத்துவ ஆராய்ச்சிகள் அடித்தளமிடுகின்றன. எனவே, மருத்துவ ஆராய்ச்சிகள் மீது சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com