
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாா் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக மோசமான காலகட்டங்களில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கிறது. அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து நிவாரணப் பொருள்களையும் விரைந்து வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.