மகாராஷ்டிர அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

மகாராஷ்டிர அரசை சீர்குலைக்க பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே(கோப்புப்படம்)
காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே(கோப்புப்படம்)


மகாராஷ்டிர அரசை சீர்குலைக்க பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் 34 எம்எல்ஏக்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள ரேடிசன் புளூ விடுதியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 35 பேர் சிவசேனைக் கட்சியினர், 7 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, “மகா விகாஸ் அகாடி' கூட்டணிக்கு ஆதரவாக உள்ளோம். நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற விரும்புகிறோம். மகாராஷ்டிர அரசு மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிர அரசை சீர்குலைக்க பாஜக முயற்சித்து வருகின்றது. முன்னதாக கர்நாடகம், மத்திய பிரதேசம், கோவா மாநிலங்களிலும் இதைத்தான் செய்தனர்” எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com