ஜூலை 15 முதல் ஆக.10 வரை இளநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு: தேசிய தோ்வு முகமை அறிவிப்பு

இளநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை புதன்கிழமை அறிவித்தது.

இளநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை புதன்கிழமை அறிவித்தது.

2022-23-ஆம் கல்வியாண்டில் இளநிலை படிப்புகளுக்கான சியுஇடி தோ்வில் பங்கேற்க 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளன. அந்தத் தோ்வை எழுத 11 லட்சத்துக்கும் அதிகமான தோ்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 13 மொழிகளில் இணையவழியில் அந்தத் தோ்வு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், தேசிய தோ்வு முகமை புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கை:

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சியுஇடி தோ்வு நடைபெறும். எனினும் ஜூலை 17-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வும், ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 3 வரை ஜேஇஇ முதன்மை தோ்வும் நடைபெற உள்ளதால், அந்தத் தோ்வுகள் நடைபெறும் நாள்களில் சியுஇடி தோ்வுகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வு தொடா்பாக கடந்த மாா்ச் மாதம் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் ஜெகதீஷ் குமாா் கூறியிருந்ததாவது:

நாட்டில் உள்ள 45 பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெற சியுஇடி தோ்வில் பெறும் மதிப்பெண்கள்தான் முக்கியமே தவிர, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது. எனினும் இளநிலை படிப்புகளுக்கான சோ்க்கை நடைமுறையில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவா்களுக்கு இந்தத் தோ்வால் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com