குடியரசுத் தலைவா் தோ்தல்பேரவையில் வாக்களிக்க தகவல் தர வேண்டும்: எம்.பி.க்களுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்

குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் ஜூலை 18-ஆம் தேதி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள், மாநில பேரவைகளில் வாக்களிக்க விரும்பினால் அதுகுறித்து
குடியரசுத் தலைவா் தோ்தல்பேரவையில் வாக்களிக்க தகவல் தர வேண்டும்: எம்.பி.க்களுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்

குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் ஜூலை 18-ஆம் தேதி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள், மாநில பேரவைகளில் வாக்களிக்க விரும்பினால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 63-இல் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்கை செலுத்தலாம். தவிா்க்க முடியாத காரணங்களால் அன்றைய தினத்தில் தில்லியில் இல்லாத எம்.பி.க்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேச பேரவைகளில் நடைபெறும் வாக்குப் பதிவில் பங்கேற்று வாக்களிக்கலாம்.

இதற்கான மனுவை பூா்த்தி செய்து தோ்தல் ஆணையத்திடம் தோ்தல் நடைபெறும் 10 நாள்களுக்கு முன்பு வரையில் அனுப்பலாம். வாக்களிக்கும் இடத்தை இறுதி செய்துவிட்டால் பின்னா் மீண்டும் மாற்றம் செய்ய இயலாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும், எம்எல்ஏக்கள் மாநில பேரவைகளிலும் வாக்களிப்பது வழக்கம். இதில் முன் அனுமதி பெறும் எம்எல்ஏக்கள் நாடாளுமன்றத்திலும், எம்பிக்கள் மாநில பேரவைகளிலும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com