ஜார்க்கண்ட் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 29.13 % வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மந்தர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 29.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 
ஜார்க்கண்ட் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 29.13 % வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மந்தர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 29.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

5 மாநிலங்கள் மற்றும் தில்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அதன்படி, மந்தர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 3.54 லட்சம் வாக்காளர்களில் 13 சதவீதம் பேர் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்தியதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். முக்கிய சாவடிகளில் வெப்காஸ்டிங் வசதிகள் தவிர, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.433 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இடைத்தேர்தலில் 1.75 லட்சம் பெண்கள் உள்பட 3.54 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி களத்தில் உள்ள 14 வேட்பாளர்களின் தேர்தல் விதியை தீர்மானிக்க உள்ளனர்.

ஜூன் 26ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்குச் சாவடிகளில் ஜார்கண்ட் ஆயுதப்படை போலீசார், சிஆர்பிஎஃப், எஸ்எஸ்பி உள்பட 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com