தில்லி புறப்பட்டார் திரௌபதி முர்மு; நாளை வேட்புமனுத் தாக்கல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, ஒடிசாவில் இருந்து இன்று தில்லி செல்கிறார். 
தில்லி புறப்பட்டார் திரௌபதி முர்மு; நாளை வேட்புமனுத் தாக்கல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, ஒடிசாவில் இருந்து இன்று தில்லி செல்கிறார். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) அறிவிக்கப்பட்டுள்ளார். 

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஆதரவுக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

இந்நிலையில், இன்று தில்லி புறப்படுவதற்காக ஒடிசா விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தில்லியில் நாளை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில் அவருக்கு ‘இஸட் பிளஸ்’’(z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் தரப்பில் மத்திய முன்னாள் அமைச்சரும் தற்போது திரிணமூல்
கட்சியைச் சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com