3-வது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. 
3-வது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. 

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்பட்ட நெடுஞ்சாலையில் 1,400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றனர். 

சாலை துப்புரவு பணிகளை நேரில் கண்காணித்து வரும் துணை ஆணையர் ராம்பன், முசரத் இஸ்லாம் கூறுகையில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட 30 நிலச்சரிவுகளில் 25, மண்சரிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

ராம்பன் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் 33 இடங்களில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பனிஹால் ரம்பன் செக்டாரில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்து நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் மாலை வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலை தொடர்ந்து போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதால், சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ராம்சூ-ராம்பன் செக்டார் பகுதியில் இன்னும் மழை பெய்து வருகிறது, மேலும் புதிய நிலச்சரிவு ராம்பன், ரோம்பாடி அருகே நெடுஞ்சாலையைத் தாக்கியுள்ளது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com