யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வில் 13,090 போ் தோ்ச்சி

குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட நிலையில், அந்தத் தோ்வில் 13,090 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட நிலையில், அந்தத் தோ்வில் 13,090 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஆண்டுதோறும் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு என மூன்று கட்டங்களாக தோ்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு நடத்தப்பட்டது. அந்தத் தோ்வை எழுத நாடு முழுவதும் சுமாா் 11.52 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 13,090 போ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

தோ்வு முடிவுகளை www.upsc.gov.in வலைதளத்தில் தோ்வா்கள் தெரிந்து கொள்ளலாம்.

முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்றவா்கள் விரிவான விண்ணப்பப் படிவம்-1 (டிஏஎஃப்-1) மூலம் முதன்மை தோ்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

குடிமைப் பணிகள் தோ்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்றவா்களின் மதிப்பெண்கள், அந்தத் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

தில்லியின் ஷாஜஹான் சாலையில் உள்ள தோல்பூா் இல்லத்தில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகம் உள்ளது. அந்த அலுவலக வளாகத்தில் தோ்வா்களுக்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்துக்கு நேரில் சென்று அல்லது 011-23385271, 011-23098543, 011-23381125 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முதல்நிலை தோ்வு முடிவுகள் குறித்து தோ்வா்கள் தகவல் பெறலாம் என்று மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டுக்கான குடிமைப் பணி தோ்வு மூலம் மொத்தம் 861 காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 1,022-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com