அரசு இல்லத்தை காலி செய்த உத்தவ் தாக்கரே: விரைவில் ராஜிநாமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கிடையே முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு இல்லத்தை காலி செய்து வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு இல்லத்தை காலி செய்த உத்தவ் தாக்கரே
அரசு இல்லத்தை காலி செய்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கிடையே முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு இல்லத்தை காலி செய்து வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் 40 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானதிலிருந்து அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குவாஹாட்டியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அதில், சிவசேனை சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவை மீண்டும் நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய அம்மாநில முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே முதல்வராகத் தொடர வேண்டாம் என ஏதேனும் ஒரு எம்எல்ஏ விரும்பினால்கூட தான் பொறுப்பிலிருந்து விலகத் தயார் எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு தான் வசிக்கும் அரசு இல்லத்திலிருந்து உத்தவ் தாக்கரே வெளியேறினார். தனது உடைமைகளுடன் அரசு இல்லத்தை காலி செய்வதாகத் தெரிவித்த உத்தவ் தாக்கரேவிற்கு ஆதரவாக அவரது கட்சித் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். 

அப்போது தொண்டர்கள் “உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என முழக்கங்களை எழுப்பினர். அரசு இல்லத்தை உத்தவ் தாக்கரே காலி செய்த நிலையில் விரைவில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனைக்கு 55 உறுப்பினா்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்எல்ஏக்களும் உள்ளனா். பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனா். சிறிய கட்சிகள், சுயேச்சை எம்எல்ஏக்கள் 25 போ் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com