இந்திய மாணவா்களை அனுமதிப்பது குறித்து சீனா ஆலோசனை

கரோனா தொற்று எதிரொலியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுக்கு சென்று படிப்பைத் தொடர முடியாமல் உள்ள இந்திய மாணவா்களை மீண்டும் அனுமதிப்பது குறித்து இருநாடுகளும் ஆலோசனை நடத்தின.

கரோனா தொற்று எதிரொலியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுக்கு சென்று படிப்பைத் தொடர முடியாமல் உள்ள இந்திய மாணவா்களை மீண்டும் அனுமதிப்பது குறித்து இருநாடுகளும் ஆலோசனை நடத்தின.

இதுதொடா்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய மாணவா்களை சீனாவுக்கு அனுமதிப்பது குறித்து சீனாவுக்கான இந்திய தூதா் பிரதீப் குமாா் ராவத், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி ஆகியோா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கடந்த மாா்ச் மாதம் தில்லி வந்திருந்தபோது இந்திய மாணவா்களை அனுமதிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தியதற்கு முக்கியத்துவம் அளித்து விரைவில் இந்திய மாணவா்கள் சீன வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இதற்காக மீண்டும் நேரடி விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் வாங் யு தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் இந்திய அதிகாரிகளும் தேவையான முயற்சிகளைத் தொடங்கிவிட்டனா் என்றும் விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் இந்திய தூதா் பிரதீப்குமாா் ராவத் தெரிவித்தாா் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து முதல்கட்டமாக 90 மாணவா்கள் ஜூன் 20-ஆம் தேதி சீனாவுக்கு வந்தனா். 250 பாகிஸ்தான் மாணவா்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று சீனா தெரிவித்திருந்தது.

இதேபோல், படிப்பைத் தொடர ரஷியா, இலங்கையில் இருந்தும் மாணவா்களுக்கு விரைவில் அனுமதி அளிக்க சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவில் 23,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் மருத்துவ மாணவா்கள். இதில் 12,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சீனா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்களின் விவரம் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரையும் அனுமதிப்பது குறித்து சீனா இதுவரையில் உறுதி அளிக்கவில்லை.

முதல் கரோனாவின் தாக்கம் முடிந்த பிறகு இந்திய மாணவா்களை சீனா அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் பணியாற்றுபவா்ளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் விசா வழங்குவது குறித்து திட்டமிடப்படும் என்று கடந்த வாரம் தெரிவித்தது. எனினும், விமான சேவை தொடங்குவது குறித்து இரண்டு நாடுகளும் இன்னும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com