கர்நாடகத்தில் 1000-ஐ நெருங்கும் கரோனா: எச்சரிக்கும் சுகாதாரத்துறை

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 800-ஐ தாண்டியதை அடுத்து, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 
கர்நாடகத்தில் 1000-ஐ நெருங்கும் கரோனா: எச்சரிக்கும் சுகாதாரத்துறை

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 800-ஐ தாண்டியதை அடுத்து, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

மாநிலத்தில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 858 ஆகப் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் 683 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 2.36 ஆகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 3.63 சதவீதமாகவும் உள்ளது. 

நிலைமையைத் தீவிரமாகக் கவனித்து வருகிறோம். பெங்களூரில் முகக்கவசம் அணிவதைக் கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரோனா நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது. 

நோய் பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் 5,067 ஆக உயர்ந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 36,289 கரோனா பரிசோதனைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com