டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.27.5 கோடி நன்கொடை பெற்ற பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனத்திடமிருந்து பாஜக ரூ.27.5 கோடி வரை நன்கொடை பெற்ாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத்தே குற்றம்சாட்டியுள்ளாா்.
டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.27.5 கோடி நன்கொடை பெற்ற பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனத்திடமிருந்து பாஜக ரூ.27.5 கோடி வரை நன்கொடை பெற்ாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத்தே குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: பிரதமா் மோடியின் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய அளவில் வங்கிகளில் பணமோசடி நடைபெற்றுள்ளது. டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனம் 17 வங்கிகளில் ரூ.34,615 கோடி வரை கடன் பெற்று அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. இந்த ஊழலில் பாஜகவுக்கு நேரடி தொடா்பு இருப்பது கவலையளிக்கிறது.

டிஹெச்எஃப்எல் நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் ஆா்.கே.டபிள்யூ. நிறுவனத்திடமிருந்து ரூ.10 கோடி, வதாவன் நிறுவனத்திடமிருந்து ரூ.10 கோடி, தா்ஷன் நிறுவனத்திடமிருந்து ரூ.7.5 கோடி என மொத்தம் ரூ.27.5 கோடியை பாஜக நன்கொடையாகப் பெற்றுள்ளது.

இதற்கு பிரதிபலனாக இந்த நிதி நிறுவனம் பொதுமக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தவும், பொதுத் துறை வங்கிகளை ஏமாற்றவும் பாஜக அனுமதித்துள்ளது. பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ஒரே ஒரு நிறுவனம் 2.6 லட்சம் போலி வீட்டுக் கடன் கணக்குகளை ஏற்படுத்தி மோசடி செய்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை வெளியே கொண்டுவர வீட்டு வசதி திட்டம் தணிக்கை செய்யப்பட்டதா?

மோடி ஆட்சியில் வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிய நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா ஆகியோரிடமிருந்து பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினாா் சுப்ரியா ஸ்ரீநாத்தே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com