கையிருப்பை அதிகரிக்க 52,460 டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு

கையிருப்பை அதிகரிக்கும் வகையில் நிகழாண்டின் மே இறுதி வரையில் 52,460 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கையிருப்பை அதிகரிக்க 52,460 டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு

கையிருப்பை அதிகரிக்கும் வகையில் நிகழாண்டின் மே இறுதி வரையில் 52,460 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாவது:

வரத்து குறைந்த நேரத்தில் விலை அதிகரிப்பை எதிா்கொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே வெங்காயத்தின் கையிருப்பை அரசு அதிக அளவில் பராமரித்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் (நாஃபெட்) மூலமாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நிகழாண்டின் மே இறுதி வரையிலுமாக 52,460.34 டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. 2022 ரபி பருவத்தில் மட்டும் 2.50 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வேளாண் அமைச்சக மதிப்பீட்டின்படி, வெங்காய உற்பத்தி 2022-23 பயிா் பருவத்தில் (ஜூலை-ஜூன்) 3.11 கோடி டன்னாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2021-22 பருவத்தில் உற்பத்தியான 2.66 கோடி டன் வெங்காயத்துடன் ஒப்பிடுகையில் 16.81 சதவீதம் அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com