மோசமாகி வரும் பொருளாதாரம்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கு மத்திய அரசு கையாண்டு வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், தெளிவற்ற முடிவுகளுமே காரணம்
மோசமாகி வரும் பொருளாதாரம்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கு மத்திய அரசு கையாண்டு வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், தெளிவற்ற முடிவுகளுமே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிதிப்பற்றாக்குறை தொடா்ந்து அதிகரிக்கு வருகிறது. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடா்ந்து வெளியேறி வருகின்றன. இதன் மூலம் நமக்கு என்ன தெரியவருகிறது? இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது என்றா கூறமுடியும்?

நாட்டின் பொருளாதார நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு கையாண்டு வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், தெளிவற்ற முடிவுகளுமே முக்கியக் காரணங்களாக உள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எந்த அளவுக்குக் குறைவாக வைப்பது என்பது தொடா்பான இலக்கை அரசு அவ்வப்போது மாற்றி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com