வெற்றிக் கொண்டாட்டம் 100 நாள்களில் திண்டாட்டமாக மாறியதேன்? கனவு கலைந்ததா?

சரியாக 100 நாள்களுக்கு முன்பு, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி, மக்களவை இடைத்தேர்தலில் தோல்விமுகம் காட்டியுள்ளது.
வெற்றிக் கொண்டாட்டம் 100 நாள்களில் திண்டாட்டமாக மாறியதேன்? கனவு கலைந்ததா?
வெற்றிக் கொண்டாட்டம் 100 நாள்களில் திண்டாட்டமாக மாறியதேன்? கனவு கலைந்ததா?


ஜலந்தர்: சரியாக 100 நாள்களுக்கு முன்பு, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி, மக்களவை இடைத்தேர்தலில் தோல்விமுகம் காட்டியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த மக்களவை இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி தோல்வியடைந்தது. இதனால், ஆம் ஆத்மியின் தேசியக் கனவு சற்று ஆட்டம் கண்டுள்ளது என்றேச் சொல்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் ஆம் ஆத்மியைச் சோ்ந்தவரும், மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான பகவந்த் மான் போட்டியிட்டாா். தோ்தலின்போது அவா் சங்ரூா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தாா். சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா், அவா் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து சங்ரூரில் ஜூன் 23-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. அதில் சிரோமணி அகாலி தளம் (அமிருதசரஸ்) தலைவா் சிம்ரன்ஜீத் மான் 2,53,154 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். சுமாா் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகுதியில் அவா் வெற்றிபெற்றுள்ளாா்.

ஆம் ஆத்மி வேட்பாளா் குா்மேல் சிங் 2,47,332 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். சங்ரூா் தொகுதியில் பகவந்த் மான் இருமுறை வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மியின் கோட்டையாக இருந்த சங்ரூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்திருப்பது ஆம் ஆத்மியின் தேசிய அரசியல் என்றக் கனவை ஆட்டம் கான வைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதிலும், இமாசலம் மற்றும் குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில், ஆம் ஆத்மி சந்தித்திருக்கும் இந்த தோல்வி நிச்சயம் அதன் செயல்திட்டத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஒருபக்கம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் மற்றும் மாற்றத்தைத் தேடிய மக்கள், மறுபக்கம் பஞ்சாபில் ஆம் ஆத்மியின் பேரவைத் தேர்தல் வியூகம் மற்றும் வாக்குறுதிகள் உள்ளிட்டவையும் சிறப்பாக அமைய வெற்றிக் கனி எளிதானது. 

தற்போது சங்ரூர் தொகுதியில் தோல்வியடைந்திருப்பதை ஆம் ஆத்மி சற்று கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும். கடந்த 100 நாள்களில் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் செயல்பாட்டுக்கான மதிப்பீடாகவும் இதைப் பார்க்கலாம். எனவே, உடனடியாக ஆம் ஆத்மி தனது செயல்பாடுகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com