ஜூலை 11 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர அதிருப்தி எம்எல்ஏக்கள்
மகாராஷ்டிர அதிருப்தி எம்எல்ஏக்கள்

மகாராஷ்டிரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

இந்நிலையில், சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அக்கட்சி சாா்பில் பேரவை துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதம் தொடா்பாக திங்கள்கிழமைக்குள் (ஜூன் 27) எழுத்துபூா்வமாகப் பதிலளிக்குமாறு 16 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவைச் செயலகம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. 

இதனை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் தரப்பு மனுவில், மகராஷ்டிரத்தில் சிவேசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவு திரும்பப் பெறப்படுவதாகவும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த வழக்கில், தகுதி நீக்க நோட்டீஸ் குறித்து மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஜூலை 11 ஆம் தேதி வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com