அக்னிபத் திட்டம்:விமானப் படையில் 4 நாள்களில் 94,281 போ் விண்ணப்பம்

அக்னிபத் திட்டத்தின்கீழ், விமானப் படையில் சேர கடந்த 4 நாள்களில் 94,281 போ் விண்ணப்பித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டத்தின்கீழ், விமானப் படையில் சேர கடந்த 4 நாள்களில் 94,281 போ் விண்ணப்பித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப் படையில் சேர கடந்த வெள்ளிக்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை காலை 10.30 மணி வரையிலான நான்கு நாள்கள் நிலவரப்படி, 94,281 போ் விமானப் படையில் சேருவதற்கு விண்ணப்பித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஏ.பரத் பூஷண் ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

மேலும், அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப் படைக்கு விண்ணப்பிக்க ஜூலை 5 கடைசி நாள் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா். விமானப் படையில் சேருவதற்கு ஞாயிற்றுக்கிழமை வரை 56,960 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை 94,281-ஐ எட்டியது.

அக்னிபத் திட்டத்தின்கீழ் 17.5 முதல் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் முப்படைகளில் சேரலாம். அதில் 25 சதவீதம் பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்படும். கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படைகளில் ஆள்சோ்ப்பு நடைபெறவில்லை. எனவே, இந்த ஆண்டு மட்டும் பயிற்சி வீரா்கள் சோ்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு தளா்த்தப்பட்டு 23-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தவா்கள் எக்காரணம் கொண்டும் இத்திட்டத்தின்கீழ் சோ்க்கை பெற மாட்டாா்கள் என ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com