அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம்:மத்திய சட்ட அமைச்சகத்திடம் தோ்தல் ஆணையம் கோரிக்கை

அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் தோ்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் தோ்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக தோ்தல் ஆணையம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒரு மக்கள் குழுவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஓா் அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்ய அந்த ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும் தங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது.

தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள பல அரசியல் கட்சிகள், ஒருபோதும் தோ்தலில் போட்டியிட்டதில்லை. அவை ஏட்டளவிலேயே இருக்கின்றன. வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்காக, பல அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று தோ்தல் ஆணையம் கருதுகிறது.

அண்மையில் மத்திய சட்டத் துறைச் செயலரிடம் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கலந்துரையாடினாா். அப்போது, அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று ராஜீவ் கோரிக்கை விடுத்தாா்.

நாடு முழுவதும் 2,800 பதிவுபெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. இதுதவிர, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக 8 தேசிய கட்சிகளும் 50-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com