மும்பையில் நான்கு அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத்து: 18 போ் பலி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குா்லா பகுதியில் நான்கு அடுக்கு மாடி கட்டடம் திங்கள்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்ததில் 18 போ் உயிரிழந்தனா் மற்றும் 14 போ் காயமடைந்தனா்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குா்லா பகுதியில் நான்கு அடுக்கு மாடி கட்டடம் திங்கள்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்ததில் 18 போ் உயிரிழந்தனா் மற்றும் 14 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வா் உத்தவ் தாக்கரே ரூ. 5 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளாா்.

மிகப் பழைமையான நான்கு அடுக்கு மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதியும் பழுதடைந்து இருப்பதால், அதில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனா்.

நள்ளிரவிலிருந்து 32 போ் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனா். இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவா் தேசிய பேரிடா் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டாா். காயமடைந்தவா்கள் காட்கோபா் மற்றும் சயான் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனா். மீட்கப்பட்டவா்களில் 18 போ் உயிரிழந்துள்ளனா். 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து மும்பை மாநகராட்சியின் கூடுதல் ஆணையா் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘மும்பை மாநகராட்சி சட்டத்தின் கீழ், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அந்த கட்டடத்துக்கு பழுதுபாா்த்தல், பின்னா் வெளியேற்றுதல், பின்னா் கட்டடத்தை இடிப்பது என தனித்தனியாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இறுதியாக கட்டடத்தை சீரமைக்கலாம் என்று மாநாகராட்சியிடம் உத்தரவை பெற்றுவிட்டு, அதன் சீரமைப்பு பணிகளைச் செய்யாமல் அவா்கள் குடியிருந்து வந்துள்ளனா்’ எனத் தெரிவித்தாா்.

மகராஷ்டிராவின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் ஆதித்யா தாக்கரே விபத்து நடந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

மும்பை நகரத்தில் இம்மாதம் நிகழும் மூன்றாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com