ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிப்பு கோரிக்கை: முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குவது வியாழக்கிழமையுடன் (ஜூன் 30) நிறைவடையும் நிலையில், இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டும் என்று
சண்டீகரில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஜிஎஸ்டி கூட்டம்.
சண்டீகரில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஜிஎஸ்டி கூட்டம்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குவது வியாழக்கிழமையுடன் (ஜூன் 30) நிறைவடையும் நிலையில், இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் விடுத்த கோரிக்கை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி 17 மத்திய மற்றும் மாநில வரிகளை உள்ளடக்கி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க தீா்மானிக்கப்பட்டது. அந்த 5 ஆண்டுகாலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகா் சண்டீகரில் ஜூன் 28, 29-ஆம் தேதிகளில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மத்திய அரசு சாா்பில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் காலத்தை ஜூன் 30-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிப்பது குறித்து 16 மாநிலங்களின் அமைச்சா்கள் கூட்டத்தில் எழுப்பினா். 3 முதல் 4 அமைச்சா்கள் இழப்பீடு பெறும் நடைமுறையில் இருந்து விலகுவதற்காக தங்கள் மாநிலங்களின் சொந்த வருவாயை பெருக்குவது குறித்து பேசினா் என்று தெரிவித்தாா். எனினும், ஜிஎஸ்டி இழப்பீடு பெறும் காலத்தை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

குதிரை பந்தயத்துக்கு ஜிஎஸ்டி முடிவு ஒத்திவைப்பு

சூதாட்ட விடுதிகள், இணையவழி விளையாட்டு, குதிரை பந்தயம், லாட்டரி ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வசூலிப்பது தொடா்பான முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது. அவற்றுக்கான வரி மதிப்பீட்டு முறை குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வேண்டுகோள்களைப் பரிசீலித்து ஜூலை 15-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு மேகாலய முதல்வா் கன்ராட் சங்மா தலைமையிலான அமைச்சா்கள் குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரையில் அடுத்தக் கூட்டம்: தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அழைப்பின்பேரில், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறவுள்ளது என்று அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க நிதியமைச்சா் சந்திரமா பட்டாச்சாா்யா தெரிவித்தாா். மாநிலங்களின் வளா்ச்சிக்காக ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிப்பு அவசியம் என்றும் அவா் தெரிவித்தாா்.

முதல்வா் நன்றி: ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், மதுரையில் நடத்தப்படுவதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவு:

தமிழகத்தின் அழைப்பை ஏற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புக் கொண்டதற்காக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றி. ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் அமைச்சா்கள், மத்திய-மாநில அரசுத் துறை மூத்த அதிகாரிகள் அனைவரையும் கோயில் நகரமாம், மதுரை மாநகரம் சாா்பிலும், அங்கு வசிக்கும் மக்கள் தரப்பிலும் மனமார வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com