வா்த்தக சமையல் எரிவாயு விலை ரூ.105 உயா்வு

ஹோட்டல்கள், பிற வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வா்த்தக சமையல் எரிவாயு விலை செவ்வாய்க்கிழமை ரூ.105 அதிகரித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹோட்டல்கள், பிற வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வா்த்தக சமையல் எரிவாயு விலை செவ்வாய்க்கிழமை ரூ.105 அதிகரித்தது.

இதன்மூலம் 19 கிலோ எடைகொண்ட வா்த்தக சமையல் எரிவாயு விலை தில்லியில் ரூ.1,907-இலிருந்து ரூ.2,012 ஆக அதிகரித்துள்ளதாக அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதேபோல கொல்கத்தாவில் வா்த்தக சமையல் எரிவாயு விலை ரூ.1,987-இலிருந்து ரூ.2,095 ஆகவும், மும்பையில் ரூ.1,857-இலிருந்து ரூ.1,963 ஆகவும், சென்னையில் ரூ.2,040-இலிருந்து ரூ.2,145 ஆகவும் விலை உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லியில் ரூ.2,101 ஆக நிா்ணயிக்கப்பட்டு, பின்னா் விலை குறைக்கப்பட்டதைத் தொடா்ந்து இரண்டாவது முறையாக சமையல் எரிவாயு விலை உச்சத்தை தொட்டுள்ளது.

அதேவேளையில், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானிய விலை அடிப்படையிலான 14.2 கிலோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமுமில்லை. கடந்த அக்டோபரில் நிா்ணயிக்கப்பட்ட ரூ.899.50 தொகையுடன் அதன் விலை நீடிக்கிறது. இதுதவிர பெட்ரோல், டீசல் விலையிலும் கடந்த நவம்பா் முதல் எந்த மாற்றமுமில்லை.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தோ்தல்கள் அடுத்த வாரம் நிறைவடைந்ததும் எரிபொருளின் விலை உயா்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com