இந்தியாவில் 18 லட்சம் கணக்குகளை தடை செய்தது வாட்ஸ் ஆப்

இந்தியாவில் 18 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 18 லட்சம் கணக்குகளை தடை செய்தது வாட்ஸ் ஆப்

இந்தியாவில் 18 லட்சம்  கணக்குகளை தடை செய்ததாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

குறுஞ்செய்திகள் மூலம் பிறர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ‘ரிபோர்ட்’ வசதியில் பதியப்பட்ட புகார்கள் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்(2021) படி கடந்த ஜனவரி 1-லிருந்து 31 ஆம் தேதி வரை 18,58,000 கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் தனிநபர் பாதுகாப்பில்  முன்னணியில் இருப்பதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் ஆப் தரப்பில் பேசியவர், ‘எங்கள் பயனர்களைப் பாதுகாக்க பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு ,  நவீன தொழில்நுட்பம் போன்றவற்றிற்கும் தரவு விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோருக்கும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்’ எனக் கூறினார். 

இதேபோல் கூகுள் நிறுவனமும் ஜனவரி மாதம் பதிவான 33,995 புகார்களின் அடிப்படையில் சர்ச்சையான உள்ளடக்கங்களைக் கொண்ட 1 லட்சத்திற்கும் அதிகமானப் பக்கங்களை  தகவல் தொழில்நுட்ப விதிகளின்(2021) படி கூகுளிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பிறரது அடையாளங்களைப் பயன்படுத்தல், பாலியல் உள்ளடக்க கருத்துக்கள், நீதிமன்ற உத்தரவு போன்ற காரணங்களால் 1,04,285 பக்கங்கள் அகற்றப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் , அதே காலகட்டத்தில் ஆட்டோமேட்டிக் வசதி மூலம் 4,01,374 உள்ளடக்கப் பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது. 

முன்னதாக, கடந்த 2021-டிசம்பர் மாதம் 94,173 மோசமானப் உள்ளடக்கங்களைக் கொண்ட பக்கங்களை கூகுள் அகற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com