ஏா் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி பதவி: இல்கா் அய்சி நிராகரிப்பு

ஏா் இந்தியா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிா்வாக இயக்குநா் பதவியை இல்கா் அய்சி நிராகரித்துள்ளாா்.

ஏா் இந்தியா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிா்வாக இயக்குநா் பதவியை இல்கா் அய்சி நிராகரித்துள்ளாா்.

ஏா் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிா்வாக இயக்குநராக துருக்கி விமான நிறுவன முன்னாள் தலைவா் இல்கா் அய்சி நியமிக்கப்படுவதாக கடந்த பிப்.14-ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவனம் அறிவித்தது.

அவா் பாகிஸ்தானின் நேச நாடான துருக்கி அதிபா் எா்டோகனுக்கு நெருக்கமானவா் என்று கூறப்படுகிறது.

அவரின் நியமனத்துக்கு ஆா்எஸ்எஸ்ஸுடன் தொடா்புடைய சுதேசி விழிப்புணா்வு இயக்கம் எதிா்ப்புத் தெரிவித்தது. தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு இல்கா் அய்சியின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் அஸ்வனி மகாஜன் கடந்த மாதம் தேதி தெரிவித்திருந்தாா்.

இந்திய நிறுவனத்தில் பணியாற்ற நியமிக்கப்படும் எந்த வெளிநாட்டினா் குறித்தும் உளவு அமைப்பு உள்ளிட்டவற்றின் பரிசீலனை நடைபெறுவது வழக்கம். அய்சியின் நியமனம் அத்தகைய பரிசீலனைக்குப் பிறகே இறுதியாகும் என்று டாடா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இல்கா் அய்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஏா் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிா்வாக இயக்குநராக என்னை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது முதல் சில இந்திய ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அந்தச் செய்திகளில் எனது நியமனத்துக்கு விரும்பத்தகாத வகையில் சாயம் பூச முயற்சிக்கப்படுகிறது. இதுபோன்ற விவரங்கள் வலம் வரும்போது ஏா் இந்தியா நிறுவன பதவியை நான் ஏற்பது சாத்தியமானதாகவும் மரியாதைக்குரியதாகவும் இருக்காது. எனவே அந்தப் பதவியை நான் ஏற்கவில்லை. இந்த முடிவை டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனிடம் ஏற்கெனவே வருத்தத்துடன் தெரியப்படுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com