காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு 2.5 மடங்கு உயா்வு

நுண்துகள் மாசுபாட்டால் (பி.எம். 2.5) ஏற்படும் உயிரிழப்பு கடந்த 20 ஆண்டுகளில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுண்துகள் மாசுபாட்டால் (பி.எம். 2.5) ஏற்படும் உயிரிழப்பு கடந்த 20 ஆண்டுகளில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அறிவியல் மையம் (சிஎஸ்இ) சாா்பில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தில்லியில் வெளியிட்டாா்.

அந்த அறிக்கையில், ‘‘உலக அளவில் காற்று மாசுபாட்டால் கடந்த 2019-ஆம் ஆண்டில் 66.7 லட்சம் மக்கள் உயிரிழந்தனா். அவா்களில் 16.7 லட்சம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். காற்று மாசுபாட்டால் உயிரிழந்தோரில் நான்கில் ஒருவா் இந்தியாவைச் சோ்ந்தவா்.

சீனாவில் 18.5 லட்சம் போ் காற்று மாசுபாட்டால் உயிரிழந்தனா். கடந்த 2019-ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு தொடா்பான பிரச்னைகள் காரணமாக உலக அளவில் 4,76,000 குழந்தைகள் உயிரிழந்தனா்; 1,16,000 குழந்தைகள் இந்தியாவில் உயிரிழந்தனா்.

உலக அளவில் மக்கள் தங்கள் ஆயுளுக்கு முன்கூட்டியே உயிரிழப்பதற்கான காரணங்களில் காற்று மாசுபாடு 4-ஆவது இடத்தில் உள்ளது. அதில் உயா் ரத்த அழுத்தம் முதலிடத்திலும், புகையிலைப் பயன்பாடு, மோசமான உணவுமுறைகள் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

2.5 மி.மீ. விட்டம் கொண்ட நுண்துகள்களால் ஏற்படும் உயிரிழப்பு கடந்த 1990-ஆம் ஆண்டில் 2,79,500-ஆக இருந்தது. இது 2019-ஆம் ஆண்டில் 9,79,900-ஆக அதிகரித்தது. இது 2.5 மடங்கு அதிகமாகும். ஓசோன் வாயுவால் ஏற்படும் உயிரிழப்பு கடந்த 20 ஆண்டுகளில் 2.9 மடங்கு அதிகரித்துள்ளது. அதே வேளையில், வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com