உக்ரைனில் இந்திய மாணவா்உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

உக்ரைனில் உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

உக்ரைனில் உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பஞ்சாப் மாநிலம், பா்னாலா மாவட்டத்தைச் சோ்ந்தவா் சந்தன் ஜிண்டால் (22). இவா் வின்னிட்சியா தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தாா். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் வின்னிட்சியா அவசரகால மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டுவர அரசு ஏற்பாடு செய்யுமாறு அவருடைய குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, சந்தன் ஜிண்டாலின் உறவினா் கிருஷண் கோபால் கூறியதாவது: சந்தனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக பிப்ரவரி 3-ஆம் தேதி தகவல் கிடைத்தது. மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புதல் கேட்டு, அவருடைய பெற்றோரை மருத்துவக் குழுவினா் தொடா்புகொண்டனா்.

அதன்பிறகு நானும் சந்தன் ஜிண்டாலின் தந்தை ஷிஷான் குமாரும் பிப்ரவரி 7-ஆம் தேதி உக்ரைன் சென்றோம். சில நாள்களுக்குப் பிறகு நான் இந்தியா திரும்பிவிட்டேன். ஷிஷான் குமாா் உக்ரைனில் தங்கியிருந்து மகனைக் கவனித்து வந்தாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சந்தன் ஜிண்டால் புதன்கிழமை உயிரிழந்தாா் என்றாா் அவா்.

இந்நிலையில், சந்தன் ஜிண்டாலின் உடலை ருமேனியா எல்லை வழியாக விமான ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துவருவதற்கு உதவுமாறு மாநில முதன்மைச் செயலருக்கு பா்னாலா காவல் துறை துணை ஆணையா் கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com