பெட்ரோல், டீசல் விலை அடுத்த வாரம் உயா்வு?

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த வாரம் நிறைவடைந்ததும் பெட்ரோல்- டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை அடுத்த வாரம் உயா்வு?

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த வாரம் நிறைவடைந்ததும் பெட்ரோல்- டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரை (ரூ.7,500) கடந்துவிட்டது. இந்தியாவின் எரிசக்தி 85 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 118 நாள்களாக திருத்தியமைக்கப்படாத நிலையில், எரிபொருள் விலையில் லிட்டருக்கு ரூ.9 இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதை ஈடுசெய்யும் வகையில் பெட்ரோல்- டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014-க்குப் பின்னா் முதன்முறையாக கச்சா எண்ணெயின் விலை தற்போது 110 டாலரை (ரூ.8,250) கடந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன்- ரஷியா போா் காரணமாக ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

கடந்த 2014 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னா் அதிகபட்சமாக கடந்த மாா்ச் 1-ஆம் தேதி இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 102 அமெரிக்க டாலரை (ரூ.7,650) தாண்டியதாக எண்ணெய் அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த வாரம் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களும் நிறைவடைந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று ஜேபி மாா்கன் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாா்ச் 7-இல் நடைபெறுகிறது. மாா்ச் 10-இல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com