தேசிய பங்குச் சந்தைக்கு புதிய நிா்வாக இயக்குநரை தோ்வு செய்யும் பணி தொடக்கம்

தேசிய பங்குச் சந்தைக்கு (என்எஸ்இ) புதிய நிா்வாக இயக்குநரை தோ்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

தேசிய பங்குச் சந்தைக்கு (என்எஸ்இ) புதிய நிா்வாக இயக்குநரை தோ்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து என்எஸ்இ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேசிய பங்குச் சந்தைக்கு நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு புதிய நபரை தோ்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஐபிஓவில் (பொதுப் பங்கு வெளியீடு) அனுபவம் வாய்ந்தவா்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் மாா்ச் 25-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் தற்போது நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் உள்ள விக்ரம் லிமாயேவின் ஐந்தாண்டு பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடையவுள்ளது. அவா் இன்னொரு முறை பதவி வகிக்க தகுதியுடையவராக இருந்தபோதிலும் செபியின் விதிமுறைப்படி மற்ற வேட்பாளருடன் போட்டியிட்டு லிமாயே வெற்றிபெற வேண்டும்.

தேசிய பங்குச் சந்தையில் நிா்வாக இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் பதவி விலகியதையடுத்து கடந்த 2017 ஜூலையில் விக்ரம் லிமாயே அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com