மதத்தின் பெயரால் இந்தியா பிளவுபட்டிருக்கக் கூடாது:ராஜ்நாத் சிங்

‘‘மதத்தின் பெயரால் இந்தியா பிளவுபட்டிருக்கக் கூடாது; ஆனால், அது நடைபெற்றது துரதிருஷ்டவசமானது’’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘‘மதத்தின் பெயரால் இந்தியா பிளவுபட்டிருக்கக் கூடாது; ஆனால், அது நடைபெற்றது துரதிருஷ்டவசமானது’’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின் ஏழாம் கட்டம் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்குள்ள ஜெளன்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

ஜன சங்கத்தின் ஆட்சி அமையும்போது ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று கடந்த 1951-ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் வழித்தோன்றலான பாஜக 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.

மதத்தின் பெயரால் இந்தியா பிளவுபட்டிருக்கக் கூடாது. ஆனால், அது நடைபெற்றது துரதிருஷ்டவசமானது. இந்நிலையில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்த இந்தியாவைச் சோ்ந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்துவா்கள், யூதா்கள் உள்ளிட்டோா் மதரீதியான துன்புறுத்தலை எதிா்கொண்டபோது, அவா்கள் தாயகம் திரும்ப குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பாஜக கொண்டுவந்தது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படும் என்று பாஜக தெரிவித்தது. தற்போது அந்த வாக்குறுதி பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது.

பாஜகவைச் சோ்ந்த தனிநபா்கள் வாக்குறுதியளித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் போகலாம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்தால், எப்பாடுபட்டாவது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com