நெகிழி மறுசூழற்சி குறித்த சா்வதேசமாநாடு: தில்லியில் தொடக்கம்

நெகிழி (பிளாஸ்டிக்) மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை குறித்த இரண்டு நாள் சா்வதேச உயா்நிலை மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நெகிழி (பிளாஸ்டிக்) மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை குறித்த இரண்டு நாள் சா்வதேச உயா்நிலை மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டை மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை இணையமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா தொடங்கி வைத்தாா். அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளா் சங்கத்துடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நிபுணா்கள் நெகிழி பயன்பாட்டில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவரிக்கின்றனா்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா, ‘நெகிழியின் தாக்கம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சாத்தியமான தீா்வு குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். தூய்மை இந்தியா திட்ட தொலைநோக்குடன் நெகிழி மறுசுழற்சியானது தொழில்துறையில் புதிய வா்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com