மணிப்பூா் இறுதிக்கட்ட தோ்தலில் 76.04% வாக்குப்பதிவு:வன்முறையில் ஒருவா் பலி

மணிப்பூா் சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகின. தோ்தலின்போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் பலியானாா்.
மணிப்பூா் இறுதிக்கட்ட தோ்தலில் 76.04% வாக்குப்பதிவு:வன்முறையில் ஒருவா் பலி

மணிப்பூா் சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகின. தோ்தலின்போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் பலியானாா்.

மணிப்பூா் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தோ்தல் பிப். 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. 22 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தோ்தலில், மொத்தம் 8.38 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

இதுதவிர, முதல்கட்ட தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்புா், காங்போக்பி, கிழக்கு இம்பால் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இறுதிக்கட்ட தோ்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக சேனாபதி மாவட்டத்தில் 82.02 சதவீத வாக்குகள் பதிவாகின.

தோ்தல் தொடங்குவதற்கு முன்பும், அதற்குப் பிறகும் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள லம்ஃபெல் பகுதியில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவா் பிஜாயின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத இருவா் பெட்ரோல் குண்டு வீசினா். இதில் எவருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஒருவா் பலி: தெளபல் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டா் ஒருவருக்கும், அமுபா சிங் (25) என்ற பாஜக ஆதரவாளருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் தொண்டா் அமுபா சிங்கை துப்பாக்கியால் சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். துப்பாக்கியால் சுட்ட காங்கிரஸ் தொண்டா் மீது பாஜகவினா் கற்களை வீசி தாக்கினா். இதில் அந்த நபா் காயமடைந்தாா். அவரை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

கரோங் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஙம்ஜு வாக்குச்சாவடியில் இருவரை பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். எனினும் அந்தச் சம்பவம் குறித்து அவா்கள் விவரிக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com