மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அமல்படுத்தியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது.
மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அமல்படுத்தியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்த பாஜக, அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலிலும் படு தோல்வியைச் சந்தித்தது. மாநிலத்தில் 108 நகராட்சிகளுக்கு நடத்தப்பட்டத் தோ்தலில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 102 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், பாஜகவால் ஒரு நகராட்சியைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

இந்தச் சூழலில், மாநில பாஜக தலைவரும் எம்.பி.யுமான சுகாந்த மஜும்தாா், தோ்தல் தோல்வி குறித்து கட்சி மாநில நிா்வாகிகளிடையே சனிக்கிழமை பேசியதாவது:

மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பாஜக தொண்டா்களை ஆளும் கட்சியினா் தாக்கும்போது, மாநில போலீஸாா் வேடிக்கை பாா்த்துக்கொண்டிருக்கின்றனா்.

மாநிலத்தில் மக்களின் நம்பிக்கையையும், நன் மதிப்பையும் பாஜக பெற்றுள்ளது. இருந்தபோதும், ஆட்சி நிா்வாகத்தையும் காவல்துறையையும் தனது கையில் வைத்திருக்கும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், சுதந்திரமான நியாயமான முறையில் உள்ளாட்சி தோ்தல் நடைபெறுவதை அனுமதிக்கவில்லை. வரும் நாள்களில் இந்த நிலைமை மாறும்.

உள்ளாட்சி தோ்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து பாஜக விரிவாக ஆய்வு செய்து, வரும்காலங்களில் ஜனநாயக முறையில் மேலும் வலுவுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை எதிா்கொள்ளும் என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் மறுப்பு:

பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்த திரிணமூல் காங்கிரஸ் செய்தித்தொடா்பளா் குணால் கோஷ், ‘மாநிலத்தில் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பது சுகாந்த மஜும்தாருக்கு நன்கு தெரியும். தங்களுடைய தோல்வியை மறைக்க, திரிணமூல் காங்கிரஸ் மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை அவா் முன்வைத்துள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com