5 மாநில பேரவைத் தேர்தல்: பெண் வாக்காளர்களே அதிகம் -ஆணையம் விளக்கம்

ஐந்து மாநிலப் பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5 மாநில பேரவைத் தேர்தல்: பெண் வாக்காளர்களே அதிகம் -ஆணையம் விளக்கம்

ஐந்து மாநிலப் பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய யூனியன் பிரதேசம் மற்றும் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இன்று (மார்ச் 7) உத்தரப் பிரதேசத்திற்கு இறுதிக்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் ஐந்து மாநிலங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், இந்தத் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சி 2022 காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு தொகுதிகள் என பெண் வாக்காளர்கள் அதிக அளவு வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியதாவது, உத்தரகண்ட் பேரவைக்கான வாக்குப்பதிவில் 62.60 சதவிகிதம் ஆண் வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில், 67.20 சதவிகிதம் பெண்கள் வாக்களித்துள்ளனர். இது ஆண்களை விட 5 சதவிகிதம் அதிகம்.

கோவாவில் 80.96 சதவிகித பெண்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் ஆண்கள் 78.19 சதவிகிதம் மட்டுமே வாக்களித்துள்ளனர். 

மணிப்பூரில் 90 சதவிகிதம் பெண்கள் வாக்களித்துள்ளனர். ஆண்கள் 88 சதவிகிதம் வாக்களித்துள்ளனர். 

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 62.62 சதவிகிதம் பெண்களும், 51.03 சதவிகிதம் ஆண்களும் வாக்களித்துள்ளனர். இதனால் உத்தரப் பிரதேசத்திலும் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com