வாகன ஓட்டிகளே.. இந்த வாரம் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம்

சுமார் நான்கு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றமில்லாமல் வைத்திருந்ததால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடுசெய்ய எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
வாகன ஓட்டிகளே.. இந்த வாரம் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம்


புது தில்லி: சுமார் நான்கு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றமில்லாமல் வைத்திருந்ததால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடுசெய்ய எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தல், உ.பி.யில், இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவு பெறுவதால், இந்த வாரத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

மறுபக்கம், உக்ரைன் மீதான போர் காரணமாக, 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 140 அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருப்பதும் கடும் விலை ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று அச்சப்பட வைக்கிறது.

இந்தியா, தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதால், ஆசியாவிலேயே, அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும் நாடாகவும் விளங்குகிறது.

ஒரு பக்கம் எரிபொருள் விலை உயர்வு மற்றும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை  இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போதிருக்கும் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்க வேண்டும் என்றால், ஒரு லிட்டருக்கு ரூ.15 என்ற அளவுக்கு விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால், 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதிக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றியமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com