உ.பி. இறுதிக்கட்ட தேர்தல்: மாலை வரை 54% வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் மாலை வரை 54.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உ.பி. இறுதிக்கட்ட தேர்தல்: மாலை வரை 54% வாக்குப்பதிவு


உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் மாலை வரை 54.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே ஆறு கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 54.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாநிலத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

வாராணசி, காஸிப்பூர், மிர்சாப்பூர் உள்ளிட்ட 54 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. சந்துளி, சோன்பத்ரா ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதில் அதிகபட்சமாக சந்துளி தொகுதியில் 59.59 சதவிகிதமும், சோன்பத்ராவில் 56.95, மிர்ஸாப்பூரில் 54.93 சதவிகிதமும் பதிவானது. 

845 கம்பெனி ஆயுதப்படை காவலர்களும், 60 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com