உ.பி.யில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 
உ.பி.யில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குகள் பதிவு


உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாநிலத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சந்தௌலியில் 50.79 சதவீத வாக்குகள் பதிவாகி, மாலை 3 மணி வரை 50 சதவீத வாக்குப்பதிவைத் தாண்டிய ஒரே மாவட்டமாக உள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 40 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சோன்பத்ராவில் 49.84 சதவீதமும், பதோஹி 47.49 சதவீத வாக்குகளும் பதிவாகி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஜான்பூரில் 47.14 சதவீதம், மாவ் 46.88 சதவீதம், காஜிபூர் 46.28 சதவீதம், அசம்கர் 45.28 சதவீதம், மிர்சாபூர் 44.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாராணசியில் 43.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மொத்தம் 2.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், 54 சட்டமன்றத் தொகுதிகளில் 613 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com