மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
சித்தராமையா
சித்தராமையா

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு-கர்நாடகம் இடையே நிலவும் மேக்கேதாட்டு பிரச்னை  தொடர்பாக இரு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என்ற மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சித்தராமையா, மத்திய அமைச்சரின் கருத்து கர்நாடக மக்களை காயப்படுத்தும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கர்நாடகப் பகுதியிலிருந்து ஆண்டுதோறும் 60 முதல் 70 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக தமிழகத்திற்கு செல்வதாகவும், அவற்றை தேக்கி வைக்க மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட கர்நாடகத்திற்கு தார்மீக உரிமை உள்ளதாகவும் சித்தராமையா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு நகரானது ஆண்டுதோறும் குடிநீர் சிக்கலை எதிர்கொண்டு வருவதாகவும், மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் ஆதாயங்களுக்காக செயல்பட்டு வருவதாகவும் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக மேக்கேதாட்டு முதல் பெங்களூரு வரை காங்கிரஸ் சாா்பில் பாத யாத்திரைக்கான அறிவிப்பை சித்தராமையா அறிவித்திருந்ததற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com