பஞ்சாப் பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை; ஏற்பாடுகள் தீவிரம்

பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறவிருக்கிறது. 
பஞ்சாப் பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை; ஏற்பாடுகள் தீவிரம்
பஞ்சாப் பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை; ஏற்பாடுகள் தீவிரம்

பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறவிருக்கிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 14 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் லூதியாணாவில் நாளை எண்ணப்பட உள்ளது. மற்ற முக்கிய நகரங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பலமுனைப் போட்டி நிலவியது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் களம் கண்டன. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரஸும், முக்கிய எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முனைப்பிலும் தோ்தலைச் சந்தித்தன.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக பேரவைத் தோ்தலைச் சந்தித்தது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்துள்ளது.

117 தொகுதிகளில் 1,304 வேட்பாளா்கள் களம் கண்டனா். 2.34 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். பொதுவாக பேரவைத் தோ்தல் அமைதியாகவே நடைபெற்றது.

ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com