கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷியா முடிவு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷிய நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷிய நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியப் படைகள் 13 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு பதிலளிக்கும்விதமாக அதன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சத்தைக் குறிவைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 

இதனிடையே, ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படுவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 300 டாலரை எட்டக்கூடும். ஐரோப்பாவின் எரிவாயு தேவையில் 40 சதவிகிதம் ரஷியாவில் இருந்துதான் பெறப்படுகிறது. எங்கள் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் ஐரோப்பாவிக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவோம். "இதுவரை நாங்கள் அத்தகைய முடிவை எடுக்கவில்லை," ஆனால் ஐரோப்பிய அரசியல்வாதிகள் ரஷ்யாவிற்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளால் எங்களை அந்த முடிவை நோக்கி எங்களைத் தள்ளுகின்றனர். "ரஷிய எண்ணெயை நிராகரிப்பது உலக சந்தையில் பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது" என்று ரஷிய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் திங்கள்கிழமை அரசு தொலைக்காட்சி மூலம் எச்சரித்திருந்தார்.

ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதிக்கப்பட்டால், "விலை உயர்வு கணிக்க முடியாததாக இருக்கும்," அது அதிகமாக இல்லாவிட்டால் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 300 டாலர் வரை இரட்டிப்பாகும் மற்றும் ரஷியாவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் முக்கிய எரிவாயு குழாயை மூடுவதற்கு தள்ளப்படுவதாக என்று ரஷிய உயர் அதிகாரி ஒருவரும் எச்சரித்திருந்தார்.

திங்கள்கிழமை அதிகாலையில், அமெரிக்க கச்சா எண்ணெய் ஒரே இரவில் பீப்பாய் ஒன்றுக்கு 130 டாலர் ஆக உயர்ந்தது, பின்னர் சர்வதேச விலை 139 டாலராக உயர்ந்தது, அதற்கு முன்பு பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 123 டாலராக இருந்தது. 

உக்ரைன் மீதான ரஷியப் படைகள் தாக்குதலுக்கு முன்பு, அமெரிக்க எரிசக்தி துறை இந்த ஆண்டு எண்ணெய் ஒரு பீப்பாய் சராசரியாக 80 டாலராக இருக்கும் என்று கணித்திருந்தது.

இந்த நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை உயர்ந்து பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ரஷியா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளால் ரஷியாவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 

இந்நிலையில், ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் இந்தியாவிற்கு சந்தை விலையை விட 25 முதசல் 27 சதவிகிதம் வரை குறைவான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் ரஷிய அரசு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com