உத்தரகண்டில் பாஜக தொடர்ந்து முன்னிலை 

உத்தரகண்டில் காங்கிரஸை விட ஆளும் பாஜக முன்னணியில் உள்ளது. ஆளும் பாஜக கட்சி வேட்பாளர்கள் 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டேராடூன்: உத்தரகண்டில் காங்கிரஸை விட ஆளும் பாஜக முன்னணியில் உள்ளது. ஆளும் பாஜக கட்சி வேட்பாளர்கள் 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும், இதர கட்சிகள் 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத், லால்குவானில் பாஜகவின் மோகன் சிங் பிஷ்ட்டை விட 2,713 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார் மற்றும் நரேந்திர நகரில் காங்கிரஸின் ஓம் கோபால் ராவத்தை விட பாஜகவின் சுபோத் யுனியால் பின்தங்கியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இருந்து காங்கிரஸுக்குத் திரும்பிய யஷ்பால் ஆர்யா, பாஜ்பூரில் பாஜகவின் ராஜேஷ்குமாரை விட 18587 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர்.

உத்தரகண்ட் மாநிலத்தின் 21 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில், ஆளும் பாஜக இந்த முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com