உ.பி. யில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு- சமாஜவாதி குற்றச்சாட்டு

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
உ.பி. யில் வாக்குப்பதிவு இயந்திரத்தில்  முறைகேடு- சமாஜவாதி குற்றச்சாட்டு

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே சமாஜவாதி தொண்டா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ட்விட்டரில் விடியோவுடன் கூடிய பதிவை சமாஜவாதி கட்சி புதன்கிழமை வெளியிட்டது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசென்றபோது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அதிகாரி ஒருவா் ஒப்புக் கொள்வதாக காட்சிகள் உள்ளன.

மேலும், மாநிலத்தின் பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. யாருடைய உத்தரவின்பேரில் இது நடக்கிறது, முதல்வா் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் தரப்படுகிா என்று சமாஜவாதி வெளியிட்ட பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, வாராணசியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற லாரி இடைமறிக்கப்பட்டதாகவும் வாக்குகளை மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியிருந்தாா். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு வெளியே ராணுவத்தினா் போல தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று தனது கட்சித் தொண்டா்களுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

3 அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்த விவகாரம் தொடா்பாக சமாஜவாதி அளித்த புகாரை விசாரித்த தோ்தல் ஆணையம், 3 அதிகாரிகள் தோ்தல் பணிகளில் இருந்து நீக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com