இறந்தும் 2 சிறுநீரகம், 2 கண்கள் அளித்து 4 பேருக்கு புதுவாழ்க்கை அளித்த 11 வயது சிறுமி!

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி 2 சிறுநீரகம், 2 கண்கள் அளித்து 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தும் 2 சிறுநீரகம், 2 கண்கள் அளித்து 4 பேருக்கு புதுவாழ்க்கை அளித்த 11 வயது சிறுமி!


சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி 2 சிறுநீரகம், 2 கண்கள் அளித்து 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப்பிரதேசம் மண்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமியான நய்னா தாக்கூர். மார்ச் 3 ஆம் தேதி நிகழ்ந்த கொடூரமான சாலை விபத்தில் தலையில் அடிப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ரத்த காயங்களுடன் சிறுமி பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு 4 நாள்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 7 ஆம் தேதி சிறுமி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்னர் மருத்துவர்கள், "உங்கள் குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் சில நோயாளிகளுக்கு பொருத்தமாக உள்ளது.

எனவே, உடல் உறுப்புதானம் செய்ய உதவினால், நான்கு பேருக்கு உங்கள் மகள் மறுவாழ்வு அளித்ததாக இருக்கும் என கூறினர். இதற்கு அவரது பெற்றோர்கள் சிறுமியின் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும், நீண்ட காலமாக டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த இரண்டு  சிறுநீரக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றிப் பொருத்தப்பட்டது. அதேபோல், சிறுமியின் இரண்டு கண்விழிகளும் இரண்டு கண் பார்வையற்றவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டது. இதன்மூலம் கண் பார்வையற்ற இரண்டு பேரின் கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டன.

இதுதுறித்து மருத்துவனை இயக்குநர் டாக்டர் சுர்ஜித் சிங் கூறுகையில், "நய்னா தாக்கூரின் இழப்பு "துக்ககரமான மற்றும் தாங்க முடியாத இழப்புதான்." இருப்பினும், சிறுமியின் குடும்பத்தாரின் துணிச்சலான, தன்னலமற்ற முடிவால் 4 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. இதுவொரு முன்மாதிரியான மற்றும் தன்னலமற்ற சேவை என்றும், நான்கு நோயாளிகளுக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது." சிறுமியின் பெற்றோரைப்போல் பலரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சிறுமி நய்னாவின் தந்தை மனோஜ் குமார் கூறுகையில், "உறுப்பு தானத்திற்கு 'சம்மதம்' தெரிவிப்பது என்பது கடினமான முடிவாகதான் இருந்தது. ஆனால், நய்னா மிகவும் கனிவான இதயம் கொண்டவராக இருந்ததால் இந்த முடிவை எடுக்க உதவியது. இதனால் அவரது ஆன்மா ஆறுதல் அடையக்கூடும், ”என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com