வெற்றியை செரிக்க கற்று கொள்ள வேண்டும்...பாஜகவுக்கு அறிவுரை சொன்ன சிவசேனை

கோவா, உத்தரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்ட சிவசேனை மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்
சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. மணிப்பூர் மற்றும் கோவாவில் அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெற்றியை செரிக்க கற்று கொள்ள வேண்டும் என பாஜகவுக்கு சிவசேனை அறிவுரை கூறியுள்ளது. 

அதேபோல, தேர்தலை சிறப்பாக கையாள்வது எப்படி என தெரிந்ததாலேயே பாஜக வெற்றிபெற்றுள்ளதாக என விமரிசனம் செய்துள்ளது.

கோவா, உத்தரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்ட சிவசேனை மோசமான தோல்வியை சந்தித்திருப்பது குறித்து பேசிய அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரெளத், "நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றதற்கு பாஜகவை போல வழங்குவதற்கு எங்களிடம் நோட்டுகள் (பணம்) இல்லை. இதுவே காரணம்" என்றார்.

பஞ்சாபில் பாஜக தோல்வி அடைந்திருப்பதை சாடிய அவர், "மோடி-ஷா தலைமையிலான பாஜக பஞ்சாபில் என்ன வெற்றி பெற்றது? தோல்வியை செரிப்பது எளிது. ஆனால் வெற்றியை செரிக்க பாஜக கற்றுக்கொள்ள வேண்டும். சிலரால் மட்டுமே வெற்றியை செரிக்க முடியும். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிர்வாகம் சரியாக இல்லை.

ஆனால், தேர்தலை சிறப்பாக கையாண்டதாலேயே பாஜக வெற்றிபெற்றுள்ளது. பாஜக பயன்படுத்திய நோட்டுகளை எங்களால் பயன்படுத்த முடியாததால், சிவசேனை நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்றது. ஆனால் நாங்கள் கோவா மற்றும் உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டோம். எங்கள் போராட்டம் தொடரும். வெற்றியோ தோல்வியோ அது முடிவல்ல. ஆரம்பமே. எதிர்காலத்தில், நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com