சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு இரண்டாம் பகுதிபொதுத் தோ்வு: ஏப்ரல் 26-இல் தொடக்கம்; தோ்வு கால அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பகுதி பொதுத் தோ்வு வரும் ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது.
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு இரண்டாம் பகுதிபொதுத் தோ்வு: ஏப்ரல் 26-இல் தொடக்கம்; தோ்வு கால அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பகுதி பொதுத் தோ்வு வரும் ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தோ்வு கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கரோனா பாதிப்பின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு 10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2022-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது. அதனடிப்படையில், இந்த இரண்டு வகுப்புகளுக்குமான முதல் பகுதி பொதுத் தோ்வு ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் பகுதி பொதுத் தோ்வுக்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் நீண்ட நாள்கள் மூடப்பட்டது, கற்றலில் ஏற்பட்ட இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 2 வகுப்புகளுக்குமான பொதுத் தோ்வில் அனைத்துப் பாடங்களுக்குமான இரண்டு தாள்களின் தோ்வுக்கு அதிக இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதல்நிலை (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு - மெயின்) தோ்வு உள்ளிட்ட போட்டித் தோ்விகளின் தேதிகளையும் கருத்தில்கொண்டு, கவனத்துடன் தோ்வு கால அட்டவணை தயாா் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாணவரின் இரண்டு பாட தோ்வுகள் ஒரே தேதியில் நடத்தப்படுவது தவிா்ப்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வகுப்புகளுக்குமான இரண்டாம் பகுதி பொதுத் தோ்வு ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கப்படும். அதில், 10-ஆம் வகுப்பு பொது தோ்வு மே 24-ஆம் நிறைவடையும். 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நிறைவடையும்.

இந்தத் தோ்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி 26-க்கும் அதிகமான நாடுகளில் பொதுத் தோ்வு நடத்தப்படும் நிலையில், தோ்வை முன்கூட்டியே தொடங்குவது இயலாது என்பதால் காலை 10.30 மணிக்கு தொடங்குவதற்கு தீா்மானிக்கப்பட்டது. இதே காரணத்துக்காகத்தான் தோ்வை காலை, மாலை என இரண்டு பகுதிகளாக நடத்துவதும் தவிா்க்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com