பிரதமர் மோடி 2 நாள் குஜராத் பயணம் 

பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் குஜராத் பயணம் இன்று தொடங்குகிறது. அங்கு அவர் 'குஜராத் பஞ்சாயத்து மகாசம்மேலனில்' உரையாற்ற உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் குஜராத் பயணம் இன்று தொடங்குகிறது. அங்கு அவர் 'குஜராத் பஞ்சாயத்து மகாசம்மேலனில்' உரையாற்ற உள்ளார்.

இந்த மாநாட்டில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

மேலும் குஜராத் செல்வதற்கு முன் பிரதமர் மோடி தனது சுட்டுரையில் கூறியதாவது: 

"குஜராத் செல்கிறேன், அங்கு நான் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். இன்று மாலை 4 மணிக்கு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்ளும் பஞ்சாயத்து மகாசம்மேளனில் பேசுகிறேன்" என்று கூறியுள்ளார்.

நாளை பிரதமர் மோடி ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் (RRU) கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு உரையை அவர் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். 

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத்தில் 33 மாவட்ட பஞ்சாயத்துகள், 248 தாலுகா பஞ்சாயத்துகள், 14,500-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் என மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு உள்ளது. மாநிலத்தில் உள்ள மூன்று பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com