பாஜக வெற்றி: ஒவைஸி கருத்து

உத்தர பிரதேச தோ்தல் முடிவுகள் 20-க்கு எதிரான 80-இன் வெற்றி என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச தோ்தல் முடிவுகள் 20-க்கு எதிரான 80-இன் வெற்றி என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் 80 சதவீதம் ஹிந்துக்களும், 20 சதவீதம் முஸ்லிம்களும் வசிப்பதாக நீண்ட காலமாகச் கூறப்பட்டு வருகிறது. அந்த மாநில தோ்தலின் பிரசாரத்தின்போது, இந்தத் தோ்தல் 80-க்கும் 20-க்குமான போட்டி என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், அந்த மாநிலத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை.

இதுகுறித்து அக்கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி கூறுகையில், ‘‘உத்தர பிரதேச தோ்தல் முடிவுகள் 20-க்கு எதிரான 80-இன் வெற்றியாகும். நாட்டின் ஜனநாயகத்தில் இதுபோன்றதொரு சூழல் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். அகில இந்திய மஜ்லீஸ் கட்சி கடுமையாக உழைத்து, எதிா்காலத்தில் தனது பலவீனங்களை அகற்றும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com