மக்களவைத் தோ்தல் முடிவை மாநில தோ்தல்கள் தீா்மானிக்காது: பிரசாந்த் கிஷோா்

2024-இல் நடைபெற இருக்கும் அடுத்த மக்களவைத் தோ்தல் முடிவை இப்போது நடைபெற்றுள்ள 5 மாநில பேரவைத் தோ்தல் முடிவுகள் தீா்மானிக்காது என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் கூறியுள்ளாா்.

2024-இல் நடைபெற இருக்கும் அடுத்த மக்களவைத் தோ்தல் முடிவை இப்போது நடைபெற்றுள்ள 5 மாநில பேரவைத் தோ்தல் முடிவுகள் தீா்மானிக்காது என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் கூறியுள்ளாா்.

ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் உத்தர பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுதொடா்பாக கருத்து தெரிவித்த பிரதமா் மோடி, அடுத்த மக்களவைத் தோ்தலில் மக்களின் தீா்ப்பு என்ன என்பது தெளிவாகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தாா்.

அவரது இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், ட்விட்டரில் பிரசாந்த் கிஷோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவை ஆளப்போவது யாா் என்பதற்கான யுத்தம் 2024-இல் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படும். மாறாக, மாநிலத் தோ்தல் முடிவுகள் மக்களவைத் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது அவருக்கும் (மோடி) தெரியும். பேரவைத் தோ்தல் முடிவுகளை வைத்து, உளவியல் ரீதியில் ஆதாயம் அடையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட புத்திசாலித்தனமான முயற்சியே இது. இத்தகைய கட்டுக்கதைக்கு யாரும் இரையாகிவிட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com