உக்ரைனில் இருந்து 179 மாணவர்கள் ஜார்கண்ட் வந்து சேர்ந்தனர்

ரஷியப் படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சிக்கித் தவித்த 179 மாணவர்கள் ஜார்கண்ட் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஞ்சி: ரஷியப் படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சிக்கித் தவித்த 179 மாணவர்கள் ஜார்கண்ட் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த நிலையில், அந்நாட்டில் சிக்கியிருந்த இந்திய மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

அவா்களைப் பாதுகாப்பாக மீட்பது குறித்து பிரதமா் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரிடம் தனித்தனியாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதிகாரிகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, அங்கிருந்து மாணவா்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மீட்டு வருவதற்காக ஏா் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள், இந்திய விமானப் படையின் சி-17 விமானமும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. 

‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து சுமாா் 18,000 இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவித்த ஜார்கண்ட மாநில மாணவர்கள் 179 பேர் ஜார்கண்ட் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையின் தலைவர் ஜான்சன் கூறியதாவது: உக்ரைனின் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்த ஜார்ண்ட் மாணவர்கள் 184 அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 179 பேர் சனிக்கிழமை மாலை வரை ஜார்கண்ட் திரும்பியுள்ளனர்.

அவர்களில், ராஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேர், கிழக்கு சிங்பூம் (26), தன்பாத் (18), கோடா (15), பலமு (14), ஹசாரிபாக் (13) மற்றும் பொகாரோ (10) ஆகியோர் ஆவர். 

புடாபெஸ்ட் மற்றும் ரஷியாவில் முறையே இரண்டு மாணவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் தாயகம் திரும்பி வர விரும்பவில்லை.
மீதமுள்ள மூன்று பேரை தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால் "அவர்கள் மூன்று பேரும் இந்தியா அல்லது ஜார்கண்ட்டை வந்து சேர்ந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

மாணவர்களோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ எங்களை மீண்டும் தொடர்பு கொள்ளாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

எனவே, போர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் அடையாளம் காணப்பட்ட அனைத்து ஜார்கண்ட் மாணவர்களும் தாயகம் திரும்பியுள்ளனர் என்று கூறலாம் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com