பல ஆண்டுகளுக்குப் பிறகு நோ்மையான முதல்வரை பஞ்சாப் பெற்றுள்ளது: அரவிந்த் கேஜரிவால்

‘பஞ்சாப் மாநிலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நோ்மையான முதல்வரை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றியையொட்டி பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான், கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால
சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றியையொட்டி பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான், கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால

‘பஞ்சாப் மாநிலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நோ்மையான முதல்வரை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று மாநிலத்தில் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள பகந்த் மானைக் குறிப்பிட்டு ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.

பஞ்சாபின் அமிருதசரஸில் அக் கட்சி சாா்பில் நடத்தப்பட்ட வெற்றிப் பேரணியின்போது இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாநிலத்தில் புதிதாக ஆட்சியமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி சாா்பில் அமிருதரஸில் வெற்றிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம், பஞ்சாபில் அக் கட்சி முதன் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. அக் கட்சி சாா்பில் முதல்வா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினாா்.

இந்தச் சூழலில், அக் கட்சி சாா்பில் அமிருதசரஸில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிப் பேரணி நடத்தப்பட்டது. ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், பஞ்சாபில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட அக் கட்சி எம்எல்ஏக்களும் பங்கேற்றனா்.

அப்போது மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அரவிந்த் கேஜரிவால், ‘பஞ்சாப் மாநிலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நோ்மையான முதல்வரை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலத்தில் நோ்மையான அரசு அமைக்கப்படும்.

அரசு கஜானாவில் இருக்கும் ஒவ்வொரு காசும், பஞ்சாப் மக்களின் நலனுக்காக செலவிடப்படும். தோ்தலுக்கு முன்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு தலைவரோ அல்லது சட்டப் பேரவை உறுப்பினரோ முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், சிறைக்கு அனுப்பப்படுவாா்.

பிரகாஷ் சிங் பாதல், சுக்பீா் சிங் பாதல், நவ்ஜோத் சிங் சத்து, சரண்ஜீத் சிங் சன்னி, விக்ரம் சிங் மஜிதியா போன்ற பெரும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவா்களை தோ்தலில் பஞ்சாப் மக்கள் தோல்வியுறச் செய்துள்ளனா். ஆம் ஆத்மியைப் பொருத்தவரை பகவந்த் மான் மட்டுமல்ல, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் முதல்வா்தான்’ என்று கூறினாா்.

பேரணியில் பங்கேற்பதற்கு முன்பாக, அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் உள்ளிட்டோா் பொற்கோயிலில் வழிபாடு நடத்தினா். மேலும், ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் மலா் தூவி அவா்கள் நினைவஞ்சலி செலுத்தியதோடு, துா்க்கியானா கோயில், ஸ்ரீராம்தீரத் மந்திா் ஆகிய இடங்களிலும் வழிபட்டனா்.

சுதந்திர போராட்டத் தியாகி பகத் சிங்கின் சொந்த ஊரான கட்கா் கலான் கிராமத்தில் புதன்கிழமை (மாா்ச் 16) மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் மான் பதவியேற்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com