பாஜக நாடாளுமன்றக் குழு நாளை கூடுகிறது

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. 
பாஜக நாடாளுமன்றக் குழு நாளை கூடுகிறது

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. 

நாடாளுமன்றக் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று(திங்கள்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், பாஜக அமைச்சர்கள், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மக்களவை, மாநிலங்களவை பாஜக எம்.பி.க்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்தும் பட்ஜெட் பரிந்துரைகளுக்கான ஒப்புதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com